×

சீர்மரபினர் நலவாரியத்தில் உறுப்பினராக சேரலாம்

 

விருதுநகர், டிச.6: விருதுநகர் மாவட்டத்தில் சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீர்மரபினர் நலவாரிய துணைத்தலைவர் இராசா அருண்மொழி வெளியிட்ட தகவல்: விருதுநகர் மாவட்டத்தில் சீர்மரபினர் நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. முதல் கட்டமாக ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் டிச.14, அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் டிச.21, திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் டிச.28 தேதிகளில் நடைபெறும்.

டிச.14 சம்மந்தபுரம் தேவர் திருமகனார் கலையரங்கம், திரௌபதியம்மன் கோவில் தெரு பசும்பொன் தேவர் கலையரங்கம், சொக்கர் கோவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண மண்டபம், சேத்தூர் பசும்பொன் தேவர் கலையரங்கம். செட்டியார்பட்டி வீராசாமி நாயுடு பள்ளி, அயன் கொல்லங்கொண்டான் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் சீர்மரபினர் நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம்கள் நடைபெற இருக்கிறது. மாவட்டத்தில் உள்ள சீர்மரபினர் சமுதாய மக்கள் வாய்ப்பை பயன்படுத்தி உறுப்பினர்களாக சேர்ந்து பயனடைய வேண்டுமென தெரிவித்துள்ளார்.

The post சீர்மரபினர் நலவாரியத்தில் உறுப்பினராக சேரலாம் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Virudhunagar district ,Deputy Chairman ,Seermarabiner Welfare Board ,Raza Arunmozhi ,Sermaraphinar ,Dinakaran ,
× RELATED விஜயகரிசல்குளம் அகழாய்வில் சிகை அலங்கார மனித தலை கண்டெடுப்பு