×

தலைமையாசிரியை குறித்து இணையதளங்களில் அவதூறு பரப்பிய ஓய்வு பெற்ற ஆசிரியர் மீது வழக்கு

நெல்லை, டிச. 6: பணகுடி அருகே தனியார் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியை குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பேசிய ஓய்வு பெற்ற ஆசிரியர் மீது போலீசார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம் பணகுடி அருகே தனியார் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற முதுகலை ஆசிரியர் செல்வராஜ் (63) என்பவர், பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியை குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியும் தகவல் பரப்பியும் வந்தார். இதுகுறித்து தலைமை ஆசிரியை பணகுடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் அஜீகுமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், அவதூறாக பேசுவது, சமூக வலைதளங்களை முறைகேடாக பயன்படுத்துவது உட்பட 3 பிரிவுகளின் கீழ் ஓய்வு பெற்ற ஆசிரியர் செல்வராஜ் மீது வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.

The post தலைமையாசிரியை குறித்து இணையதளங்களில் அவதூறு பரப்பிய ஓய்வு பெற்ற ஆசிரியர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Rice ,Panakudi ,Pakudi ,Nella district ,
× RELATED நெல்லை டவுனில் வீட்டு முற்றத்தைவிட...