×

மணிப்பூர் வன்முறை விசாரணை கமிஷனுக்கு மேலும் 6 மாதம் அவகாசம்: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: மணிப்பூரில் கடந்த ஆண்டு மே 3ம் தேதி இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறை தொடர்பாக விசாரணை நடத்த கவுகாத்தி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி அஜய் லம்பா தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை கமிஷனை ஒன்றிய அரசு கடந்த ஆண்டு ஜூன் 4ம் தேதி அமைத்தது. வன்முறை நீடித்ததால், கடைசியாக நவம்பர் 20 வரை விசாரணை கமிஷனுக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சகம் நேற்று விடுத்த அறிக்கையில், ‘அடுத்த ஆண்டு மே 20ம் தேதிக்குப் பிறகு, முடிந்த வரை விரைவாக விசாரணை கமிஷன் அறிக்கையை சமர்பிக்கும்’ என மேலும் 6 மாத கால அவகாசத்தை நீட்டித்துள்ளது.

The post மணிப்பூர் வன்முறை விசாரணை கமிஷனுக்கு மேலும் 6 மாதம் அவகாசம்: ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Manipur Violence Inquiry Commission ,Union Govt. New ,Delhi ,Manipur ,Chief Justice ,Guwahati High Court ,Ajay Lamba ,Union Government ,Dinakaran ,
× RELATED டெல்லியில் பிப்ரவரியில் பேரவை...