×

கிராம நூலக கட்டிடம் ஆக்கிரமிப்பு

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு ஒன்றியம் கீச்சலம் ஊராட்சி புதுகீச்சலம் கிராமத்தில் கிராம நூலகம் செயல்படாத நிலையில் வீணாகி வருகிறது. இந்நிலையில், அக்கட்டிடத்தை அப்பகுதியில் கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் சமையல் செய்து ஓய்வெடுக்கும் கூடாரமாக பயன்படுத்தி வருகின்றனர். வாசிப்பு திறனை ஊக்குவிக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட இதுபோன்ற கிராம நூலகங்கள் முறையான பராமரிப்பின்றி வீணாகி வருவதாக வாசகர்கள் வேதனை தெரிவித்தனர். கிராம நூலகங்களை பராமரிக்கும் வகையில் பகுதி நேர நூலகர்களுக்கு முறையாக மதிப்பூதியம் வழங்கி வாசகர்களுக்கு ஏற்ப நூல்கள், வார, தினசரி நாளிதழ்களுக்கு ஏற்பாடு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

The post கிராம நூலக கட்டிடம் ஆக்கிரமிப்பு appeared first on Dinakaran.

Tags : Pallipattu ,Pudukeechalam ,Keechalam ,Dinakaran ,
× RELATED தெரு நாய்கள் அடித்துக் கொலை