- ஆர்.கே. பத்தா
- பஞ்சாயத்து யூனியன் முதன்மை பள்ளி
- ஸ்ரீவிலாசபுரம் கிராமம் ஜிகுலூர்
- ஆர் கே பெட்டா ஒன்றியம்
- திருவள்ளூர் மாவட்டம்
ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அருகே அரசு பள்ளியில் மதிய சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றியம், ஜிகுலூர் என்கிற ஸ்ரீவிலாசபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டன.
மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களில், 8 பேருக்கு வாந்தி, பேதி மற்றும் ஒருவர் மயக்கம் அடைந்தார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு மாணவர்களின் பெற்றோர் பதறி அடித்துக்கொண்டு பள்ளிக்கு வந்தனர். தகவல் அறிந்ததும், அம்மையார்குப்பம் வட்டார அரசு மருத்துவமனை மருத்துவர் ஞானசேகர், வங்கனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் குழு மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வெங்கடேசன், சுகாதார ஆய்வாளர் சலீம்பாஷா ஆகியோர் பள்ளிக்கு சென்று அனைத்து மாணவர்களுக்கும் பரிசோதனை, முதலுதவி மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும், மாணவர்கள் அனைவரும் உப்புக்கரைசல் வழங்கப்பட்டன. தற்போது அனைத்து மாணவர்கள் நலமாக உள்ளனர். தொடர்ந்து மருத்துவ குழு பள்ளியில் இருந்த குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. மதிய உணவு மீதம் இல்லாததால் உணவு பரிசோதனை செய்யப்படவில்லை. இதனால், மாணவர்களுக்கு எதனால் வயிற்று போக்கு ஏற்பட்டது என்பது குறித்து மருத்துவக்குழு ஆராய்ந்து வருகிறது. தகவலறிந்த வட்டார கல்வி அலுவலர்கள் பள்ளிக்கு வந்து சமையலர் மற்றும் தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்: ஆர்.கே.பேட்டை அருகே பரபரப்பு appeared first on Dinakaran.