- ஆத்தூர்
- ஆறுமுகநேரி
- ஆத்தூர் மெயின் பஜார்
- முத்து வாப்பா
- வடக்கு ஆத்தூர் முஸ்லிம் பெரிய தெரு, தூத்துக்குடி மாவட்டம்
- ஆத்தூர்
ஆறுமுகநேரி, டிச.2: ஆத்தூர் மெயின்பஜாரில் நள்ளிரவில் செல்போன் கடையை உடைத்து ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மற்றும் உதிரி பாகங்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். தூத்துக்குடி மாவட்டம் வடக்கு ஆத்தூர் முஸ்லிம் பெரிய தெருவை சேர்ந்த முத்து வாப்பா மகன் சித்திக்(37). இவர் தூத்துக்குடி திருச்செந்தூர் பிரதான சாலையில் ஆத்தூர் மெயின் ரோட்டில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன் தினம் இரவு 10 மணியளவில் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று காலை 6.30 மணியளவில் அப்பகுதி வழியாக நடைபயிற்சி மேற்கொண்ட சித்திக் உறவினர் சிலர் அவரது கடை பூட்டு உடைத்து ஷட்டர் சிறிதளவு தூக்கி இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு வந்த செல்போன் கடை உரிமையாளர் சித்திக் பார்த்த போது மர்ம நபர்களால் கடையை உடைத்து செல்போன் மற்றும் உதிரி பாகங்களை திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து ஆத்தூர் போலீசாருக்கு சித்திக் தகவல் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து அங்கு வந்த திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ் குமார் மற்றும் ஆத்தூர் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் தடவியல் நிபுணர் அருணாச்சலம் தலைமையிலான மூன்று நிபுணர்கள் கொண்ட குழு செல்போன்கள் திருட்டு போன கடையில் சோதனை மேற்கொண்டனர். மேலும் இது குறித்து கடை உரிமையாளர் சித்திக் அளித்த புகாரின் பேரில் ஆத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் மாரியப்பன் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
மேலும் போலீசார் அப்பகுதி சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை மேற்கொண்டதில் அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் நம்பர் பிளேட் இல்லாத பைக்கில் எதிரே வந்து நின்றுள்ளனர். பின்னர் செல்போன் கடையில் பூட்டை உடைத்து ஷட்டரை தூக்க முடியாமல் சிறிதளவு தூக்கியவாறு உள்ளே சென்று செல்போன்கள் மற்றும் உதிரி பாகங்களை கொள்ளையடித்து சென்றுள்ளது தெரிகிறது. மேலும் இது குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.
The post ஆத்தூரில் நள்ளிரவில் துணிகரம்; கடையை உடைத்து ரூ.1 லட்சம் செல்போன்கள் கொள்ளை appeared first on Dinakaran.