- ஆடுயார்கோயில்
- அறந்தாங்கி
- கோபாலபட்டினம்
- ஆவுடையார் கோயில்
- புதுக்கோட்டை மாவட்டம்
- ஆவுடையார்கோயில் ஊராட்சி ஒன்றியம்
- ஆவுடையார்கோயில்
- தின மலர்
அறந்தாங்கி, டிச.2: புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகே கோபாலபட்டினத்தில் குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழை தண்ணீரால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் மழைநீரை அகற்ற கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம் நாட்டாணி புரசகுடி ஊராட்சியில் உள்ள கோபாலபட்டினத்தில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழையால் குடியிருப்பு பகுதியில் மழை தண்ணீர் தேங்கி உள்ளது.
இந்த மழை தண்ணீர் வெளியே செல்ல வழி இல்லாமல் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது. எனவே அந்த பகுதியில் கொசு தொல்லை அதிக அளவில் உள்ளதாக அந்தபகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால் அந்த பகுதி பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு அச்சமாக உள்ளது என அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். எனவெ கோபாலபட்டினத்தில் தேங்கி கிடக்கும் மழை தண்ணீரை அப்புறபடுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post ஆவுடையார்கோவில் அருகே குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரால் கொசுத்தொல்லை: அப்புறப்படுத்த கோரிக்கை appeared first on Dinakaran.