- வெங்கடாசல நாயக்
- வட சென்னை
- Ponkumar
- சென்னை
- அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயக்கர்
- ராயபுரம்
- ஜனாதிபதி
- சமூக நல கவுன்சில்
- டாக்டர்
- எம். ராமகிருஷ்ணன் நாயக்
- வி.வீர
- துணைத் தலைவர்
- சமூக நீதி சத்திரிய பேரவை
- அகிலா…
சென்னை: பகுத்தறிவு சிந்தனையாளர், சமூகநீதி போராளி அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயக்கரின் படத்திறப்பு விழா ராயபுரத்தில் நேற்று நடந்தது. விழாவிற்கு சமூக நற்பணி மன்ற தலைவர் பேரா.மு.ராமகிருஷ்ணன் நாயகர் தலைமை வகித்தார். சமூகநீதி சத்திரியர் பேரவை துணை தலைவர் வி.வீரா வரவேற்றார்.
அகில இந்திய வீர வன்னிய குல சத்திரியர் பாகாப்பு சங்கம் நிறுவன தலைவர் பா.ஜெய்ஹரி நாயகர், வடசென்னை வன்னியர்கள் நல சங்கத்தின் வழக்கறிஞர் மு.சங்கர், சமூகநீதி சத்திரியர் பேரவை ஆர்.கே.நகர் தொகுதி தலைவர் அழகரசன், தொகுதிச் செயலாளர் எம்.முருகன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் காங்கை குமார், எ.ஆனந்த், அம்பத்தூர் தொகுதி தலைவர் எம்.சீனிவாசன், மாதவரம் தொகுதி தலைவர் கே.மதன்ராஜ், ஆவடி தொகுதி தலைவர் ஆவடி தனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்குமார், அத்திபாக்கம் வெங்கடாசல நாயக்கர் படத்தை திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினார். விழாவில் முன்னாள் எம்எல்ஏ உ.பலராமன், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜி.சந்தானம், சித்த மருத்துவர் க.தணிக்காசலம், சுப்பிரமணி, நடிகர் மகாநதி சங்கர், இயக்குநர் மோகன்ஜி, கிரியாடெக் பாஸ்கர், சமூக நீதி சத்திரியர் பேரவை மாநில இணை பொது செயலாளர் எஸ்.எம்.குமார், பொறியாளரணி தலைவர் எச்.வெங்கடேஷ், துணை தலைவர் அருள் அன்பரசு, நந்தனம் கல்லூரி முன்னாள் முதல்வர் எம்.கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் ஜெ.மோகனசுந்தரம், பேராசிரியர் டாக்டர் பி.முத்துசாமி உட்பட பலர் புகழஞ்சலி செலுத்தினர்.
விழாவில் பொன்குமார் பேசுகையில், ‘செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்பதற்கு மிகப்பெரிய போராட்டங்களை நடத்திய வெங்கடாசல நாயக்கருக்கு அவரது வீட்டை அடையாளப்படுத்தி நினைவு இல்லம் ஏற்படுத்த வேண்டும். வடசென்னை பகுதியில் முழு உருவ சிலை அமைத்திட வேண்டும்,’ என்றார்.
The post வடசென்னை பகுதியில் வெங்கடாசல நாயக்கருக்கு சிலை அமைக்க வேண்டும்: பொன்குமார் வலியுறுத்தல் appeared first on Dinakaran.