×
Saravana Stores

வெங்கடாசல நாயகரின் புகழை போற்றிடும் வகையில் வடசென்னை பகுதியில் முழு உருவ சிலை அமைத்திட வேண்டும்: புகழஞ்சலி நிகழ்ச்சியில் பொன்குமார் பேச்சு

சென்னை: பகுத்தறிவு சிந்தனையாளர், சமூக நீதி போராளி அத்திபாக்கம் வெங்கடாசல நாயக்கரின் படத்திறப்பு விழா ராயபுரத்தில் இன்று நடந்தது. விழாவிற்கு சமூக நற்பணி மன்ற, தலைவர் பேரா.மு.ராமகிருஷ்ணன் நாயகர் தலைமை தாங்கினார். சமூக நீதி சத்திரியர் பேரவை துணைத் தலைவர் வி.வீரா வரவேற்றார்.

அகில இந்திய வீர வன்னிய குல ஷத்திரியர் பாகாப்பு சங்கத்தின் நிறுவனத் தலைவர் பா.ஜெய்ஹரி நாயகர், வடசென்னை வன்னியர்கள் நல சங்கத்தின் வழக்கறிஞர்.மு.சங்கர், சமூக நீதி சத்திரியர் பேரவை ஆர்.கே நகர் தொகுதி தலைவர் அழகரசன், தொகுதிச் செயலாளர் எம்.முருகன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் காங்கை குமார், எ.ஆனந்த், அம்பத்தூர் தொகுதி தலைவர் எம்.சீனிவாசன், மாதவரம் தொகுதி தலைவர் கே.மதன்ராஜ், ஆவடி தொகுதி தலைவர் ஆவடி தனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் பொன்குமார் அவர்கள் அத்திபாக்கம் வெங்கடாசல நாயக்கர் படத்தை திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினார்.

விழாவில் முன்னாள் எம்எல்ஏ உ.பலராமன், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜி.சந்தானம், சித்த மருத்துவர் க.தணிக்காசலம், சுப்பிரமணி, நடிகர் மகாநதி சங்கர், இயக்குநர் மோகன்ஜி, கிரியாடெக் பாஸ்கர், சமூக நீதி சத்திரியர் பேரவை மாநில இணைப் பொது செயலாளர் எஸ்.எம்.குமார், பொறியாளரணி தலைவர் எச்.வெங்கடேஷ், துணைத் தலைவர் அருள் அன்பரசு, நந்தனம் கல்லூரி முன்னாள் முதல்வர் எம்.கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் ஜெ.மோகனசுந்தரம், பேராசிரியர் டாக்டர் பி.முத்துசாமி உட்பட பலர் புகழஞ்சலி செலுத்தினர்.

விழாவில் பொன்குமார் பேசுகையில், “செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த வன்னியர்களிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்பதற்கு மிகப்பெரிய போராட்டங்களை நடத்தியவர். அப்படிப்பட்ட அத்திப்பாக்கம் வெங்கடாசலநாயகர் வடசென்னை ஏழு கடற் பகுதியில் வாழ்ந்து மறைந்தவர். அத்திப்பாக்கம் வெங்கடசல நாயகர் வாழ்ந்த அந்த தெருவிற்கு அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகர் தெரு என அரசு பெயர் சூட்டிட வேண்டும். அவரது வீட்டை அடையாளப்படுத்தி நினைவு இல்லம் ஏற்படுத்திட வேண்டும். அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகரின் புகழை போற்றிடும் வகையில் அவர் வாழ்ந்து மறைந்த வடசென்னை பகுதியில் முழு உருவ சிலை அமைத்திட வேண்டும்” என்றார்.

The post வெங்கடாசல நாயகரின் புகழை போற்றிடும் வகையில் வடசென்னை பகுதியில் முழு உருவ சிலை அமைத்திட வேண்டும்: புகழஞ்சலி நிகழ்ச்சியில் பொன்குமார் பேச்சு appeared first on Dinakaran.

Tags : North Chennai ,Venkatachala Nayak ,Ponkumar ,CHENNAI ,Athipakkam Venkatachala Nayak ,Rayapuram ,President of the ,Social ,Welfare ,Council ,Prof. ,M. Ramakrishnan Nayak ,V. Veera ,Vice-Chairman ,Social Justice Satria Council ,
× RELATED வடசென்னை பகுதியில் வெங்கடாசல...