×

பெஞ்சல் புயல் தாக்கம் சென்னை பல்கலை பருவத் தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை: பெஞ்சல் புயல் தாக்கம் காரணமாக இன்று நடைபெறவிருந்த சென்னை பல்கலைக்கழக பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெஞ்சல் புயல் தாக்கம் காரணமாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. புயல் கரையை கடந்துவிட்டாலும் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகம் சார்பில் இன்று (டிசம்பர் 2) நடத்தப்படவிருந்த பருவத் தேர்வுகள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதற்கான மாற்று தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தொலைநிலைப் படிப்புகளுக்கு கடந்த நவம்பர் 30, டிசம்பர் 1ம் தேதிகளில் நடைபெறவிருந்த பருவத் தேர்வுகளையும் சென்னை பல்கலைக்கழகம் முழுமையாக ஒத்தி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

The post பெஞ்சல் புயல் தாக்கம் சென்னை பல்கலை பருவத் தேர்வுகள் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Madras University ,Benjal Cyclone ,CHENNAI ,Cyclone Benjal ,Chennai University ,Tamil Nadu ,
× RELATED ஃபெஞ்சல் புயல், கனமழை காரணமாக சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல்