×

அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்கும் வரை முன்னேற முடியாது: நாட்டின் பொருளாதாரம் குறித்து ராகுல் காந்தி கவலை

புதுடெல்லி: பொருளாதார பலன்கள் சில கோடீஸ்வரர்களுக்கு மட்டுமே கிடைத்து வந்தால் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் அடையாது என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சமூக வலைதள பக்கத்தில் நேற்று பதிவிடுகையில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவு 5.4 % ஆக குறைந்துள்ளது.

சில கோடீஸ்வரர்களக்கு மட்டுமே பொருளாதார பலன்கள் சேரும் வரை நாட்டின் பொருளாதாரம் முன்னேறாது. விவசாயிகள், தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர்,ஏழைகள் பொருளாதார பிரச்னையில் சிக்கி கொண்டிருக்கிறார்கள். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகியவற்றால் உற்பத்தி துறையின் பங்கு வெறும் 13 % குறைந்துள்ளது. இது 50 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைவாகும்.

கடந்த ஆண்டை காட்டிலும் உருளைக்கிழங்கு, வெங்காயத்தின் விலை 50 சதவீதம் அதிகரித்துள்ளன. இதனால், சில்லறை பணவீக்கம் 6.21 % உயர்ந்துள்ளது. ரூபாயின் பெறுமதி 84.50 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்கும்போது, பொருளாதாரத்தின் சக்கரம் முன்னேறும் என குறிப்பிட்டுள்ளார்.

The post அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்கும் வரை முன்னேற முடியாது: நாட்டின் பொருளாதாரம் குறித்து ராகுல் காந்தி கவலை appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,NEW DELHI ,Lok Sabha ,India ,Dinakaran ,
× RELATED ஜிஎஸ்டி வரியை மேலும் உயர்த்த மோடி திட்டம்: ராகுல்காந்தி குற்றச்சாட்டு