டெல்லி: வழிபாட்டுத் தலங்கள் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை வேறு எந்த நீதிமன்றமும் புதிய வழக்கு பதிவு செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த போது வழிபாட்டுத் தலங்கள் எப்படி இருந்ததோ, அப்படியே தொடர வேண்டும் என்ற வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை எதிர்த்து பாஜகவைச் சேர்ந்த சுப்புரமணியன் சுவாமி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்துள்ளனர். சட்டத்துக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
The post வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக புதிதாக வழக்கு எதுவும் தொடரக் கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.