×

குன்னூரில் கட்டிட பணியின்போது உயிரிழந்த திமுக நிர்வாகி உடலுக்கு அரசு தலைமை கொறடா அஞ்சலி

 

குன்னூர், நவ.30: குன்னூர் ஊராட்சி ஒன்றியம் வண்டிச்சோலை ஊராட்சி, சோலடாமட்டம் பகுதியை சேர்ந்தவர் முருகையா (33). இவர் திமுக தேர்தல் பணிகுழு உறுப்பினராகவும், சோலடா மட்டம் கிளை துணை செயலாளருமாக இருந்தார். மேலும், கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் குன்னூர் டைகர்ஹில் பகுதியில் பழைய கட்டிடத்தை இடிக்கும் பணியில் முருகையா உட்பட பலர் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக முருகையா மீது தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து முருகையாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் சோலடாமட்டம் கிராமத்தில் நேற்று பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திமுக நிர்வாகிகள் மற்றும் கிராமமக்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து தமிழ்நாடு அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் முருகையாவின் உடலுக்கு மலர் அணிவித்து மரியாதை செலுத்தினார்.

முருகையாவின் குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறிய, அவரது குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை வழங்கினார். தொடர்ந்து குன்னூர் ஒன்றிய செயலாளர் பிரேம்குமார், தலைமை பொதுக்குழு உறுப்பினர் காளிதாசன், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் கருணாநிதி, தொழிலாளர் அணி ஜெயக்குமார் உட்பட திமுக நிர்வாகிகள் பலர் அஞ்சலி செலுத்தினர்.

The post குன்னூரில் கட்டிட பணியின்போது உயிரிழந்த திமுக நிர்வாகி உடலுக்கு அரசு தலைமை கொறடா அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,DMK ,Coonoor ,Murugaiah ,Soladamattam ,Vandicholai Panchayat ,Coonoor Panchayat Union ,Cholada ,Dinakaran ,
× RELATED கோலப்போட்டியில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசு