×

மணிகண்டம் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது

 

மணிகண்டம், நவ.30: திருச்சி மாவட்டம், மணிகண்டம் அருகே உள்ள கொங்கு டவுன் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மணிகண்டம் காவல்நிலைய போலீசார் நேற்று அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்ற ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் கொங்கு டவுன் பகுதியை சேர்ந்த பாலமுருகன் மகன் பிரேம்குமார் (28) என்பதும், அவர் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.  இதையடுத்து பிரேம்குமாரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

The post மணிகண்டம் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Manikandam ,Kongu Town ,Manikandam, Trichy district ,Manikandam police station ,Dinakaran ,
× RELATED மணிகண்டம் அருகே முருகன் கோயிலில் சோமவார விழா