×
Saravana Stores

திருச்சி அருகே மழைநீர் ஈரப்பதத்தால் வீட்டின் சுவர் இடிந்தது

தா.பேட்டை, டிச.2:திருச்சி அருகே மழைநீர் ஈரப்பதத்தால் கூலித்தொழிலாளியின் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. திருச்சி மாவட்டம் தா.பேட்டை அடுத்த பைத்தம்பாறை கிராமத்தை சேர்ந்தவர் ராஜம்மாள். கூலித்தொழிலாளி. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த புயல் மழை காரணமாக இவரது ஓட்டு வீட்டின் பின்பக்க சுவர் மழைநீர் ஈரப்பதத்தால் நேற்று முற்றிலும் இடிந்து விழுந்து சேதம் அடைந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து அப்பகுதி வருவாய் ஆய்வாளர் சரண்யா நேரில் சென்று பார்வையிட்டார். மேலும், முசிறி தாசில்தார் லோகநாதன் வழியாக நிவாரணம் வழங்க ஆர்டிஓ ஆரமுத தேவசேனாவிற்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.

The post திருச்சி அருகே மழைநீர் ஈரப்பதத்தால் வீட்டின் சுவர் இடிந்தது appeared first on Dinakaran.

Tags : Tha. Beti ,Tiruchi ,Trichy District Ta. ,Rajammal ,Paithampara ,Pettai ,Trichy ,Dinakaran ,
× RELATED திருமாவளவன் குறித்து அவதூறு பேச்சு...