- புதுக்கோட்டை
- மாவட்டம்
- ஓய்வூதியம் பெறுவோர் குறைகளை நிவர்த்தி செய்தல்
- மாவட்ட ஓய்வூதியர்கள்
- பரிகாரம்
- கலெக்டர்
- அருணா
- புதுக்கோட்டை மாவட்டம்
- ஓய்வூதியம்
- குறை தீர்க்கும் கூட்டம்
- தின மலர்
புதுக்கோட்டை, நவ.30: புதுக்கோட்டை மாவட்டம் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் 6ம் தேதி நடக்கிறது. புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து அரசுத் துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதரியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களின் ஓய்வூதியப் பலன்கள் தொடர்பான குறைகளை கேட்டறிந்து தீர்வு காணும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வரும் 6ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மற்றும் சென்னை ஓய்வூதிய இயக்குநர் முன்னிலையில் ‘ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக ஓய்வூதியப் பலன்கள் குறித்து குறைகள் ஏதேனும் இருப்பின், மனு செய்ய விரும்புவோர் படிவத்தில் தெளிவாக எழுதி அதனை தவறாமல் இரட்டைப்பிரதிகளில் வரும் டிசம்பர் 2ம் தேதிக்குள் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்குக் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். ‘ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்டம் டிசம்பர் 6ம் தேதி கோரிக்கை படிவம், (தவறாமல் கீழ்காணும் அனைத்து விவரங்கள் பூர்த்திசெய்யப்பட வேண்டும்).
மனுதாரர் பெயர் மற்றும் முகவரி, ஓய்வூதிய ஆணை எண், ஓய்வு பெற்ற அரசு அலுவலர் பெயர், ஓய்வு பெற்ற அரசு அலுவலர் கடைசியாக பணிபுரிந்த பதவி மற்றும் அலுவலகம், அரசு அலுவலர் ஓய்வு பெற்ற தேதி, இறந்த தேதி, தீர்வு செய்ய வேண்டிய கோரிக்கையின் விபரம், இதற்கு முன் மனு செய்திருந்தால் அதன் விபரம், எந்த அரசு அலுவலரால் கோரிக்கை தீர்வு செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post புதுக்கோட்டை மாவட்ட ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் appeared first on Dinakaran.