×
Saravana Stores

பட்டுக்கூடு விலை ரூ706 ஆக அதிகரிப்பு

தர்மபுரி, நவ.28: தர்மபுரி மாவட்ட பட்டுக்கூடு அங்காடியில் தினமும் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் வெண்பட்டுக்கூடுகளை ஏலத்திற்கு கொண்டு வருகின்றனர். பட்டுக்கூடுக்கு நல்ல விலை கிடைப்பதால், தர்மபுரி மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளும் பட்டுக்கூடுகளை தர்மபுரி பட்டுக்கூடு அங்காடிக்கு கொண்டு வருகின்றனர். கடந்த 9ம் தேதி ஒருகிலோ பட்டுக்கூடு ரூ630க்கும், 11ம் தேதி ரூ635க்கும், 13ம் தேதி ரூ641க்கும், நேற்று முன்தினம் ஒரு கிலோ பட்டுக்கூடுகள் ரூ661க்கும் ஏலம் போனது.

கடந்த25ம் தேதி ரூ671க்கும், 26ம் தேதி ரூ700க்கும் ஏலம் போனது. நேற்று 23 விவசாயிகள் 2104 கிலோ பட்டுக்கூடுகள் கொண்டுவந்தனர். இது, கிலோ ரூ706க்கு ஏலம் போனது. தொடர்ந்து பட்டுக்கூடுகளின் விலை அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று தர்மபுரி பட்டுக்கூடு அங்காடியில் வெண் பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ706க்கும், சரசாரியாக ரூ635க்கும், குறைந்தபட்சமாக ரூ535க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ13 லட்சத்து 43 ஆயிரத்து 874க்கு வர்த்தகம் நடந்தது.

The post பட்டுக்கூடு விலை ரூ706 ஆக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dharmapuri district ,
× RELATED தர்மபுரியில் சம்பா பயிர் தண்ணீரில் மூழ்கி சேதம்