×

மாவீரர்கள் தினத்தை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

ஜெயங்கொண்டம், நவ.28: நவம்பர் 27 மாவீரர்கள் நாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வீரவணக்கம் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்று தாய் நாட்டுக்காக தமது உயிரை இழந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களையும் அவர்களோடு சேர்ந்து போரிட்டு உயிர் இழந்த எல்லைப்படை துணைப்படை வீரர்களையும், புலிகளோடு இணைந்து உயிர் இழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்து வண்ணம். நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அரியலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கதிர் வளவன் தலைமையில் ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் மேலிட பொறுப்பாளர் வீர செங்கோலன், விவசாய பாதுகாப்பு இயக்கம் பசுமை வளவன், சிபி ராஜா, செல்வராசு, சின்ன ராஜா, மகளிர் அணி திலகவதி, சங்கர், குமரவேல், சுரேஷ், கோவிந்தசாமி, சகாதேவன், தேச மாரியப்பன், சத்தியநாதன், சரவணன், அருண், வேல்முருகன், ஹனீப், தினேஷ் மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய நகர முகம் பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post மாவீரர்கள் தினத்தை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Liberation Tigers Party ,Heroes' Day ,Jeyangondam ,Liberation Tigers ,Tamil ,Eelam ,Tamil Eelam ,
× RELATED தாராபுரம் வழியாக சென்ற திருமாவளவனுக்கு உற்சாக வரவேற்பு