- பள்ளிபாளையம் நகரம்
- சபை
- Pallipalayam
- செல்வராஜ்
- துணை ஜனாதிபதி
- பாலமுருகன்
- ஆணையாளர்
- தயாளன்
- பள்ளிபாளையம் நகர்மன்றக் கூட்டம்
- தின மலர்
பள்ளிபாளையம், நவ.27: பள்ளிபாளையம் நகர மன்ற கூட்டம் தலைவர் செல்வராஜ் தலைமையில் நேற்று நடந்தது. துணை தலைவர் பாலமுருகன், ஆணையாளர் தயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முறைப்படி தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின்னர், மக்கள் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய அதிமுக கவுன்சிலர் சுசீலா, தனது வார்டில் பல இடங்களில் குடிநீர் குழாய்கள் கசிந்து தண்ணீர் வீணாகி வருவதாகவும், இது குறித்து அலுவலர்களிடம் தெரிவித்தால் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் புகார் தெரிவித்தார். ஒன்பதாம்படி சத்யாநகர் பகுதி வீடுகளில் மழைநீர் புகுவதாகவும், சாக்கடை அமைப்பை சரி செய்ய வேண்டுமெனவும் அதிமுக கவுன்சிலர் செந்தில் குறிப்பிட்டார்.
5மாதமாகியும் சாலையில் சேதமான பகுதியில் பேட்ஜ் ஒர்க் செய்யவில்லையென, மதிமுக கவுன்சிலர் சிவம், பைப்லைன் போடப்பட்ட இடத்தில் சாலையை சீரமைக்கவில்லையென திமுக கவுன்சிலர் குருசசியும், பலமுறை புகார் செய்தும் பைப்லைன் பேட்ஜ் ஒர்க் செய்யப்படவில்லை என அதிமுக கவுன்சிலர் சுரேசும் குறிப்பிட்டனர். சாயக்கழிவுநீர் பிரச்னையால் வார்டில் உள்ள கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் சாயம் கலந்த நீர் வெளியாகிறது. இது குறித்து அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், பிரச்னைக்கான தீர்வு கிடைக்கவில்லை. எனவே பள்ளிபாளையம் பகுதியில் பதினைந்து நாட்களுக்கு சாயப்பட்டறைகள் இயங்குவதை நிறுத்தி வைக்க வேண்டுமென கூறிய திமுக கவுன்சிலர் வினோத், கையோடு கொண்டு வந்திருந்த சாயக்கழிவுநீர் கலந்த பாட்டிலை ஆணையாளரிடம் ஒப்படைத்தார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வார்டு உறுப்பினர் என்ற முறையில் என்னை அழைக்கவில்லை. எதிர்கட்சி எம்எல்ஏ பங்கேற்கும் நிகழ்ச்சியில் ஏன் என்னை அழைக்கவில்லை என குறிப்பிட்டார். இதற்கு ஆதரவு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் சுதா, சாந்திசண்முகம் உள்ளிட்டோர் பேசினர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. உறுப்பினர்களை சமாதானப்படுத்திய தலைவர் வார்டு உறுப்பினர்கள் அவரவர் வார்டு தொடர்பான விசயங்களை மட்டுமே பேசுங்கள், வார்டில் அடிப்படை வசதிகளில் ஏதும் பிரச்னை என்றால், பணியாளர்களிடம் தெரிவிப்பதைவிட எனது கவனத்திற்கு கொண்டு வாருங்கள் என அறிவுறுத்தினார். கூட்டத்தில் 38 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
The post பள்ளிபாளையம் நகர மன்ற கூட்டம் appeared first on Dinakaran.