- Senthamangalam
- புதுச்சத்திரம்
- ஆந்திரப் பிரதேசம்
- கர்நாடக
- கேரளா
- கோயம்புத்தூர்
- ஈரோடு
- நீலகிரி
- திண்டுக்கல்
- சேலம்
சேந்தமங்கலம், நவ.27: புதுச்சத்திரம் ஒன்றியம் புதன்சந்தையில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை மாட்டுச்சந்தை கூடுவது வழக்கம். திங்கட்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை மதியம்வரை நடைபெறும். சந்தையில் மாடுகளை வாங்க விற்க ஆந்திரா, கர்நாடகம், கேரளா, கோவை, ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் உள்ளூர் விவசாயிகள், வியாபாரிகள் வருவர். நேற்று கூடிய மாட்டு சந்தையில் ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் இருந்து பால் மாடுகள், இறைச்சி மாடுகளை குறைவாக கொண்டு வந்தனர். மழையின் காரணமாக கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தமிழக உள் மாவட்டங்களில் மாடுகளை வாங்க குறைந்தளவில் வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் வெளி மாநிலங்களுக்கு மாடுகள் விற்பனை குறைந்தது.
கேரளாவில் ஐயப்பன் கோயில் சீசன், இறைச்சி கோழிகள் மலிவு விலைக்கு கிடைப்பதால் புதன் சந்தையில் இறைச்சி மாடுகள் விற்பனை குறைந்தது. அங்கிருந்து குறைவான வியாபாரிகள் மாடுகளை வாங்க வந்திருந்தனர். இதனால் மாடுகளின் விலை குறைந்தது. இறைச்சி மாடுகள் ₹20 ஆயிரத்திற்கும், கறவை மாடுகள் ₹45 ஆயிரத்திற்கும், கன்று குட்டிகள் ₹14 ஆயிரத்திற்கு விற்பனையானது. மொத்தமாக ₹1.90 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.
The post புதன்சந்தையில் மாடுகள் வரத்து குறைவு appeared first on Dinakaran.