நெல்லை, நவ. 27: நெல்லையில் நாளை (28ம் தேதி) எரிவாயு நுகர்வோர் குறை தீர் கூட்டம் நடக்கிறது. இதுகுறித்து கலெக்டர் கார்த்திகேயன் கூறியிருப்பதாவது: நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கு எரிவாயு உருளை பதிவு செய்வதில் ஏற்படும் குறைபாடுகள், தடங்கல்கள் மற்றும் எரிவாயு உருளைகள் வழங்குவதில் காலதாமதம் குறித்து நுகர்வோர்கள் தங்கள் குறைகளைப் பதிவு செய்யலாம். இதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர் மற்றும் எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொள்ளும் எரிவாயு நுகர்வோர் குறை தீர் கூட்டம் நாளை (28ம் தேதி) பிற்பகல் 4 மணியளவில் நடக்கிறது. நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா தலைமையில் நடக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு நுகர்வோர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
The post நெல்லையில் நாளை எரிவாயு நுகர்வோர் குறை தீர் கூட்டம் appeared first on Dinakaran.