×

மக்கள் குறைதீர் கூட்டத்தில் அரசு பள்ளிக்கு விளையாட்டு மைதானம்: மாணவர்கள் மனு

 

கரூர், நவ. 26: அரசு பள்ளிக்கு விளையாட்டு மைதானம் கேட்டு மாணவர்கள் மனு கொடுத்தனர். கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். இந்த முகாமில், கரூர் மாவட்டம் புகளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது:

கரூர் மாவட்டம் புகளுரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 1956ல் துவங்கப்பட்டது- இந்த பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். மாணவர்கள் விளையாடும் அளவுக்கு தேவையான மைதானம் இல்லாமல் உள்ளது. இதனால், மாணவர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

The post மக்கள் குறைதீர் கூட்டத்தில் அரசு பள்ளிக்கு விளையாட்டு மைதானம்: மாணவர்கள் மனு appeared first on Dinakaran.

Tags : Playground for Govt School ,People's Grievance ,Karur ,People's Grievance Day ,Karur District Collector ,District Collector ,Thangavel ,People's Grievance Meeting ,Dinakaran ,
× RELATED மஞ்சள்இலைநோயால் கரும்பு மகசூல்...