×

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சமூகத்தால் ஒருபோதும் விடுதலை அடைய முடியாது: கனிமொழி எம்.பி. கருத்து

சென்னை: பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சமூகத்தால் ஒருபோதும் விடுதலை அடைய முடியாது என பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாளை குறிப்பிட்டு கனிமொழி எம்.பி. கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது;

“பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சமூகத்தால், ஒருபோதும் விடுதலை அடைய முடியாது. ஆண்களுக்கு நிகராய் சமூக அடுக்கின் அத்தனை படிநிலைகளையும் தனது அறிவால், உழைப்பால் கட்டியமைத்தவர்கள் பெண்கள்.

ஆனால், வீடு தொடங்கி வீதி வரை சமூகத்தின் எல்லா தளங்களிலும் பெண்கள் மீதான வன்முறை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.

பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு தினமான இன்று, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்போம் என்றும், அவர்களுக்கு எதிரான வன்முறைகளை அனுமதிக்க மாட்டோம் என்றும் உறுதியேற்போம்” என தெரிவித்துள்ளார்.

The post பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சமூகத்தால் ஒருபோதும் விடுதலை அடைய முடியாது: கனிமொழி எம்.பி. கருத்து appeared first on Dinakaran.

Tags : Moral M. B. ,Chennai ,Day for the Elimination of Violence against Women ,Kanimozhi M. B. ,X ,Dinakaran ,
× RELATED காங். புகாரில் நடவடிக்கை இல்லை: கனிமொழி எம்.பி