×

இந்தியா, ஆஸ்திரேலியா ஒப்பந்தம் ராணுவ விமானங்களுக்கு வான்வழி எரிபொருள்

புதுடெல்லி: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளின் விமானப் படைகள் வான்வெளியில் எரிபொருள் நிரப்புவதற்கான புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் பாட் கான்ராய் ஆகியோர் லாவோஸின் தலைநகரான வியன்டியானில் பிராந்திய பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்றனர்.

அப்போது இருதரப்பினருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் ஆஸ்திரேலியா விமானப்படை விமானங்களுக்கும், இந்திய விமானப்படை விமானங்களுக்கும் இடையே வான்வெளியில் எரிபொருள் நிரப்ப ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

The post இந்தியா, ஆஸ்திரேலியா ஒப்பந்தம் ராணுவ விமானங்களுக்கு வான்வழி எரிபொருள் appeared first on Dinakaran.

Tags : India ,New Delhi ,forces ,Australia ,Union ,Defense Minister ,Rajnath Singh ,Pat Conroy ,Vientiane ,Laos ,Dinakaran ,
× RELATED வெளிநாடுகளுக்கு இளைஞர்களை அழைத்து...