புதுடெல்லி : டெல்லியில் கடும் காற்று மாசுபாடு காரணமாக அரசு ஊழியர்களின் பணி நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் குளிர் காலம் தொடங்க உள்ள நிலையில் காற்று மாசு அதிகரிக்க தொடங்கியது. இதனை, கட்டுப்படுத்த குளிர்கால செயல்திட்டம், கிராப் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. ஆனாலும், காற்று மாசுவை குறைக்க முடியவில்லை. டெல்லி முழுவதும் நச்சுப்புகை சூழ்ந்துள்ளதால் சுவாசிக்க முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர்.
இந்த நிலையில் கடுமையான காற்று மாசுபாட்டை கருத்தில் கொண்டு ஒன்றிய பணியாளர்கள் அமைச்சகம் நேற்று பிறப்பித்த உத்தரவில், டெல்லியில் காற்று மாசுபாடு அதிகமாக இருப்பதால், அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் அமைப்புகள் டெல்லி-தேசியத் தலைநகர் பிராந்தியத்தில் அமைந்துள்ள அலுவலகங்களைப் பொறுத்த வரையில் வெவ்வேறு நேரத்தைக் கடைப்பிடிக்கலாம்.
அலுவலகங்கள் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரையும், காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரையும் செயல்படலாம். வாகன மாசுபாட்டைக் குறைக்க பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தவும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
The post காற்று மாசுபாடு டெல்லியில் ஒன்றிய அரசு ஊழியர்கள் பணி நேரம் மாற்றி அமைப்பு appeared first on Dinakaran.