×
Saravana Stores

கர்நாடகாவில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகார்: 4அரசு அதிகாரிகள் வீடுகளில் ரூ.26கோடி மதிப்புள்ள பணம், நகை பறிமுதல்

பெங்களூரு: கர்நாடகாவில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அரசு அதிகாரிகள் 4 பேரின் வீடுகளில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத 26 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம், நகை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. மங்களூருவில் கனிமம் மற்றும் சுரங்கத்துறையில் கிருஷ்ணவேணி என்பவர் மூத்த புவியாளராக பணியாற்றி வருகிறார். இதையடுத்து பெங்களூரு, மங்களூரு, மாண்டியா, சிம்பூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் அவர்களுக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள் என 25 இடங்களில் லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தினர்.

இதில் கணக்கில் வராதா 26 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள், பணம், வெள்ளி பொருட்கள், சொத்து, ஆவணங்கள் சிக்கின. குறிப்பாக திப்பேசாமி வீட்டில் மட்டும் 28 தங்க மோதிரங்கள், 23 தங்க ஜெயின்கள், 8 லட்சம் ரொக்கம், விலை உயர்ந்த கை கடிகாரங்கள், ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் என 3 கோடியே 43 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கிருஷ்ணவேணியிடம் சுமார் ரூ.12கோடி, மகேஷிடம் ரூ.6 கோடி மற்றும் மோகனிடம் ரூ.4 கோடி மதிப்புள்ள நகை, பணம் உள்ளிட்டவை கிடைத்தன. இதை அனைத்தையும் லோக் ஆயுக்தா போலீசார் பறிமுதல் செய்து எடுத்து சென்றனர்.

The post கர்நாடகாவில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகார்: 4அரசு அதிகாரிகள் வீடுகளில் ரூ.26கோடி மதிப்புள்ள பணம், நகை பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Bengaluru ,Krishnaveni ,Mangaluru ,
× RELATED ஆரஞ்சு பழம் விற்பனை ஜோர்