×
Saravana Stores

பழங்குடியினர் மக்களுக்கு அடையாள அட்டை: காஞ்சி கலெக்டர் வழங்கினார்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியம் சிங்காடிவாக்கத்தில் நடந்த பழங்குடியினருக்கான முகாமில் பழங்குடியினர் மக்களுக்கு அடையாள அட்டையை காஞ்சி கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், சிங்காடிவாக்கம் ஊராட்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், தேசிய தொல்குடி (பழங்குடி) மக்களுக்கான சிறப்பு முகாம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. இதில் பழங்குடியினரிடம் மனுக்களை பெற்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் குறைகளை கேட்டறிந்தார்.

இம்முகாமில் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். பழங்குடியினர் மக்களின் அடிப்படை வசதிகளான ஆதார் அட்டை, மின்னணு குடும்ப அட்டை, மருத்துவ காப்பீடு அட்டை, நலவாரிய அட்டை போன்றவை பெறுவதற்கான மனுக்கள் பெறப்பட்டன. தொடர்ந்து பழங்குடியினர் மக்களுக்கு பழங்குடியினர் நலவாரிய அடையாள அட்டைகளை கலெக்டர் வழங்கினார். இம்முகாமினை தொடர்ந்து சிங்காடிவாக்கம் ஊராட்சியிலுள்ள அங்கன்வாடி மையத்தினை கலெக்டர் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். இம்முகாமில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தனலெட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post பழங்குடியினர் மக்களுக்கு அடையாள அட்டை: காஞ்சி கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Kanchi Collector ,WALLAZABAD ,Kalaichelvi ,Singadiwak ,Wallajabad ,Union ,Adi Dravidar ,Tribal Welfare Department ,Singadivakkam Panchayat, ,Kanchipuram District ,Walajabad Union ,National Tolkudi ,Palagudi ,
× RELATED அய்யம்பேட்டை அருகே வேன் மோதி தொழிலாளி பலி