- விவசாய கூட்டுறவு-
- சமூகம்
- பெரியபுத்தேரி கிராமம்
- செங்கல்பட்டு
- 71வது அகில இந்திய ஒத்துழைப்பு வாரம்
- சேலம் மாவட்டம்
- ஒத்துழைப்பு
- அமைச்சர்
- பெரியகருப்பன்
- பெரியபுத்தேரி
- செங்கல்பட்டு மண்டலம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
செங்கல்பட்டு: சேலம் மாவட்டத்தில், 71வது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழா மாநில அளவில், கூட்டுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நடைபெற்றது. விழாவில், தமிழக அளவில் சிறந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கமாக செங்கல்பட்டு மண்டலத்திற்கு உட்பட்ட பெரியபுத்தேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டு கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பனால் கேடயம் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சி தலைவரிடம், கேடயத்தை காண்பித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர் ஆ.க சிவமலர், செங்கல்பட்டு மண்டல இணைப்பதிவாளர் வே.நந்தகுமார், மத்திய வங்கியின் உதவி பொது மேலாளர் சசிகுமார், இணைப்பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர்கள் வேணுகோபால், வேலு மற்றும் சங்க செயலாளர் சிவகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
The post பெரியபுத்தேரி கிராமத்திலுள்ள வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு விருது appeared first on Dinakaran.