ஜார்ஜ்டவுன்: பிரதமர் மோடி நேற்று கரீபியன் நாட்டு தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தார். பிரதமர் நரேந்திரமோடி நேற்று முன்தினம் அதிகாலை கயானா வந்தடைந்தார். அவருக்கு தலைநகரான ஜார்ஜ்டவுன் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியை கயானா அதிபர் இர்பான் அலி வரவேற்றார். 56 ஆண்டுகளுக்கு பின் கயானா சென்ற முதல் பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார். அதன் பின்னர் அங்கு நடந்த இந்திய -கரீபியன் சமூகத்தின் இரண்டாவது உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
மாநாட்டிற்கு இடையே பிரதமர் மோடி, அதிபர்கள் சான் சந்தோகி(சுரிநாம்), முகமது இர்பான் அலி(கயானா) , பிலிப் ஜே பியர் (செயின்ட் லூசியா), காஸ்டன் பிரவுன்(ஆன்டிகுவா மற்றும் பார்புடா), டிக்கன் மிட்செல்(கிரெனடா), பிலிப் பிரேவ் டேவிஸ்(பஹாமாஸ்) மியா அமோர் மோட்லி(பார்படாஸ்) கீத் ரவுலி(டிரினிடாட் மற்றும் டொபாகோ) ஆகியோரை சந்தித்தார். இந்தியா உடனான கரீபியன் நாடுகளின் உறவை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கை மற்றும் இந்தியாவுடன் முக்கிய துறைகளில் கரீபியன் நாடுகளின் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இந்த சந்திப்பின்போது பிரதமர் விவாதித்தார். இதனை தொடர்ந்து நேற்று கயானா நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தில் பிரதமர் மோடி நேற்று உரையாற்றினார்.
The post கரீபியன் நாட்டு தலைவர்களுடன் மோடி சந்திப்பு: இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை appeared first on Dinakaran.