×

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 38 ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்: 2 பேரிடம் விசாரணை


ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வாகனத்தில் கடத்த முயன்ற 38 ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 2 பேரிடம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சுந்தரபாண்டியன் பகுதியில் சிலர் ரேஷன் அரிசி மூட்டைகளை வாகனத்தில் ஏற்றி கடத்த முயல்வதாக கிருஷ்ணன்கோவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அப்பகுதிக்கு போலீசார் விரைந்து சென்றபோது, அப்பகுதியில் ஒரு வாகனத்தில் மூட்டைகளை 2 பேர் ஏற்றி கொண்டிருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் மதுரை மாவட்டம், கள்ளிக்குடி பகுதியைச் சேர்ந்த முத்துமாரியப்பன்(33) மற்றும் பேரையூர் பகுதியைச் சேர்ந்த முருகன்(40) என்பதும், அவர்கள் ரேஷன் அரிசி மூட்டைகளை வாகனத்தில் ஏற்றி கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடமிருந்து 38 ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இது குறித்து விருதுநகர் உணவு பொருள் கடத்தல் பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் அங்கு வந்த உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், இருவரையும் விருதுநகருக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 38 ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்: 2 பேரிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Srivilliputur ,Food Trafficking Prevention Unit ,Sundarapandian ,Srivilliputur, Virudhunagar District ,
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்...