கெங்கவல்லி, நவ.19: கெங்கவல்லி சுற்றுவட்டாரத்தில், மதுபானங்கள் பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்வதாக ஆத்தூர் டிஎஸ்பி சதீஷ்குமாருக்கு புகார் வந்தன. இதன் பேரில், கெங்கவல்லி எஸ்ஐ கணேஷ்குமார் தலைமையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கூடமலை பகுதியில் சக்திவேல் (50), செல்வராஜ் (56), கடம்பூர் பகுதியில் செந்தில்குமார் மனைவி ராணி (55) ஆகியோர், வீடுகளில் மதுவை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.
The post கூடுதல் விலைக்கு மது விற்ற 3 பேர் கைது appeared first on Dinakaran.