×

காரில் கஞ்சா பதுக்கி விற்ற வழக்கில் வாலிபர் கைது

உடன்குடி, நவ. 19: உடன்குடியில் காரில் கஞ்சா வைத்திருந்த வழக்கில் தப்பியோடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடன்குடியில் குலசேகரன்பட்டினம் மெயின் ரோடு டாஸ்மாக் கடை அருகே காரில் வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கும்பலை கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அப்போது போலீசார் பிடியிலிருந்து ஒருவர் மட்டும் தப்பி ஓட்டம் பிடித்தார். விசாரணையில் தப்பி ஓடியவர் உடன்குடி தேரியூர் தெற்கு தெருவை சேர்ந்த ஜெயாண்டி மகன் சரத் என்ற சரத்குமார்(30) என்பது தெரியவ ந்தது. அவரை போலீசார் தேடிவந்த நிலையில் உடன்குடி காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த சரத்குமாரை போலீசார் கைது செய்தனர்.

The post காரில் கஞ்சா பதுக்கி விற்ற வழக்கில் வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Udonkudi ,Kulasekaranpatnam Main Road Tasmak ,Onankudi ,Dinakaran ,
× RELATED குலசை கோயிலில் உண்டியல் வசூல் ₹17.24 லட்சம்