×

உசிலம்பட்டியில் கொட்டித்தீர்த்த மழையால் பலத்த சேதமடைந்த சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

 

உசிலம்பட்டி, நவ. 19: உசிலம்பட்டியில் கொட்டிய பலத்த மழையால், வத்தலக்குண்டு சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உசிலம்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நகராட்சி பகுதியில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளது.

குறிப்பாக வத்தலகுண்டு சாலையில் ஆங்காங்கே பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டு பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது மேலும் வத்தலக்குண்டு சாலையில் பல்வேறு இடங்களில் தார்ச்சாலை என்பதே இல்லாமல் குழிகள் மட்டுமே இருக்கின்றன. எனவே நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் இணைந்து உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post உசிலம்பட்டியில் கொட்டித்தீர்த்த மழையால் பலத்த சேதமடைந்த சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Usilampatti ,Vatthalakundu road ,Usilambatti ,Dinakaran ,
× RELATED உசிலம்பட்டி அருகே...