×

காஞ்சியில் மதுபாட்டில்களுக்கு கூடுதல் பணம் டாஸ்மாக் கடை ஊழியர்கள் 17 பேர் பணியிடை நீக்கம்: மண்டல மேலாளரும் அதிரடியாக டிரான்ஸ்பர்

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபானத்திற்கு கூடுதல் பணம் வசூல் வசூலித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் 8 பேரை நேற்று முன்தினம் காஞ்சிபுரம் மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், காஞ்சிபுரம் ஜெம் நகர் டாஸ்மாக் கடையில் டிஜிட்டல் முறையில் ரசீது வழங்கி விற்பனை செய்யும் மதுபானங்களுக்கு கூடுதலாக பணம் வசூலிப்பதாக சிலர் புகார் தெரிவித்தனர்.

அதன்பேரில், காஞ்சிபுரம் மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு, ஜெம் நகர் டாஸ்மார்க் கடையில் பணிபுரியும் 2 மேற்பார்வையாளர்கள், 7 விற்பனையாளர்கள் என 9 பேரை நேற்று அதிரடியாக பணியிடை நீக்கம் செய்துள்ளனர். இதன்மூலம் மதுபானங்களுக்கு கூடுதல் பணம் வசூலித்த விவகாரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டாஸ்மார்க் ஊழியர்கள் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. மேலும், காஞ்சிபுரம் மாவட்ட டாஸ்மாக் மண்டல மேலாளரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

The post காஞ்சியில் மதுபாட்டில்களுக்கு கூடுதல் பணம் டாஸ்மாக் கடை ஊழியர்கள் 17 பேர் பணியிடை நீக்கம்: மண்டல மேலாளரும் அதிரடியாக டிரான்ஸ்பர் appeared first on Dinakaran.

Tags : KANJI TASMAK STORE ,Chennai ,Mundinam Kanchipuram District Tasmak Administration ,Tasmak ,Outikukad ,Valajabad, Kancheepuram district ,Kangxi Tasmak store ,Dinakaran ,
× RELATED சிக்னல் கோளாறு காரணமாக எழும்பூர் வரும் ரயில்கள் தாமதம்..!!