×

வாத்தலை அய்யன் வாய்க்கால் பாலத்தின் இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டும்

 

ஜீயபுரம், நவ.18: திருச்சி நாமக்கல் சாலை வாத்தலை அய்யன் வாய்க்கால் பாலத்தின் இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி – நாமக்கல் பிரதான சாலைக்கும் முக்கொம்பு மேலணையின் நுழைவு பகுதியான வாத்தலை அய்யன் வாய்க்கால் பாலத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. முக்கொம்பு மேலணையில் இருந்து அய்யன் வாய்க்கால் பாலத்தின் வழியாக திருச்சி நாமக்கல் சாலையில் இருசக்கர வாகனங்கள் ஏற முடியாத நிலை உள்ளது.

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சரி செய்யப்படாத நிலையில் இருசக்கர வாகனங்களில் செல்லும் பலரும் பள்ளத்தில் நிலை தடுமாறி கீழே விழும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஆட்டோ உள்ளிட்ட இலகுரக வாகனங்களும் இந்தப் பகுதியை கடக்க மிகுந்த சிரமப்பட வேண்டியுள்ளது. போக்குவரத்து மிகுந்த இப்பகுதியில் விபத்து ஏற்படுவதை தடுக்க தொடர்புடைய துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படும் முன் வாகன ஓட்டிகள், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அய்யன் வாய்க்கால் பாலத்தை இணைக்கும் சாலையோர பள்ளத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வாத்தலை அய்யன் வாய்க்கால் பாலத்தின் இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Wattalai Ayyan canal bridge ,Jiyapuram ,Trichy Namakkal Road ,Vathalai Ayyan Waikal Bridge ,Trichy – ,Namakkal ,road ,Vathalai Aiyan ,Dinakaran ,
× RELATED ஜீயபுரம் போலீசில் சீமான் மீது புகார்