×

கந்தர்வகோட்டை பகுதியில் தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

 

கந்தர்வகோட்டை,நவ.18: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஆதனக்கோட்டை, பெருங்களூர் பகுதிகளில் சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையை பயன்படுத்தி விவசாயிகள் வயல்களிலும், தோட்டங்களில் விவசாய பணி செய்து வருகிறார்கள். தொடர் மழையில் குளங்கள் நிரம்பத நிலையில் பூமி சார்ந்து மழைநீர் செல்லுவதால் ஆழ்துளை கிணற்றில் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. மேலும் வயல், தோட்டங்களுக்கு இயற்கை மழை உள்ளதால் பயிர்கள் செழிப்பாக உள்ளது. ஆழ்துளை கிணற்றில் இருந்து நீர் பாய்ச்சுவது மிகவும் குறைந்து உள்ளது. இதனால் மின் சேமிப்பு உள்ளது. மேலும் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உரங்களையும் கூட்டுறவு வேளாண்மை கடன் சங்கங்களில் இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் கோட்டுக்கொண்டுள்ளனர்.

The post கந்தர்வகோட்டை பகுதியில் தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Kandarvakota ,Kandarvakottai ,Adhanakottai ,Perungalur ,Pudukottai ,Gandharvakot ,
× RELATED புதுக்கோட்டை மாநகராட்சி பகுதிகள் காலை முதல் பரவலாக மழை