×
Saravana Stores

தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இரவு 10 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இந்த மாத தொடக்கத்தில் அதிகபட்சமாக தொடர்ந்து 2 நாட்கள் பலத்த மழை கொட்டிய நிலையில் பின்னர் பரவலாக லேசான மழை அவ்வப்போது பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இரவு 10 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

“நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், திருச்சி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு” என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இரவு 10 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Bengal Sea ,Weather ,
× RELATED மாநிலத்தின் மின்தேவை...