×
Saravana Stores

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் ஒன்பதரை மணி நேரத்தில் 18 செ.மீ அளவு மழை பதிவு

நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யத்தில், காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை 18 செ.மீ அளவுக்கு கனமழை பதிவாகியுள்ளது. இன்று காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை பெய்துள்ள மழையின் அளவு, கோடியக்கரையில் 13.44 செ.மீ ஆக பதிவாகியுள்ளது

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தின் தொடர் கனமழை பெய்தது. நாகப்பட்டினம், கீழ்வேளூர், திருக்குவளை, வேதாரண்யம் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் கனமழை பெய்தது.

அதிகபட்சமாக வேதாரண்யத்தில் கனமழை பெய்தது. இன்று காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை வேதாரண்யத்தில் 18 செ.மீ மழை பதிவானது. கோடியக்கரையில் 13.4 செ.மீ மழையும், தலைஞாயிறுவில் 3.3 செ.மீ மழையும் பதிவானது.

நாகையில் 3.9 செ.மீ, திருப்பூண்டியில் 3.5 செ.மீ, வேளாங்கன்னியில் 2.7 செ.மீ மழை பதிவானது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் குறைந்தபட்சமாக திருக்குவளையில் இன்று மாலை 6 மணி வரை 1.2 செ.மீ மழை பதிவானது.

The post நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் ஒன்பதரை மணி நேரத்தில் 18 செ.மீ அளவு மழை பதிவு appeared first on Dinakaran.

Tags : NINE O'CLOCK ,VEDARANYA, NAGAI DISTRICT ,Nagai ,Kodiakara ,Nagai District Vedaranya ,Dinakaran ,
× RELATED நாகை கடல் பகுதியில் இருந்து இலங்கை...