×
Saravana Stores

திருவாரூருக்கு ஜனாதிபதி முர்மு 30ம் தேதி வருகை

திருவாரூர்: திருவாரூர் அருகே நீலக்குடியில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் 9வது பட்டமளிப்பு விழா வரும் 30ம் தேதி நடைபெறுகிறது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார். இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் கூறுகையில், திருவாரூர் மத்திய பல்கலை கழகத்தில் வரும் 30ம் தேதி பட்டமளிப்பு விழா நடக்கிறது.

இதில் கலந்து கொள்ளுமாறு கடந்த ஆகஸ்ட் மாதம் டெல்லி சென்று, ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தோம். அவர் கலந்து கொள்வதாக தெரிவித்திருந்தார். ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வரவில்லை. 18ம் தேதி (நாளை) தான் ஜனாதிபதி வரும் தகவல் உறுதியாக தெரியவரும் என்றார்.

The post திருவாரூருக்கு ஜனாதிபதி முர்மு 30ம் தேதி வருகை appeared first on Dinakaran.

Tags : President ,Tiruvarur ,Murmu ,convocation ,Central University ,Neelkudi ,Drabupati Murmu ,Vice-Chancellor ,Krishnan ,
× RELATED சொல்லிட்டாங்க…