×

தேவகோட்டை கண்ணங்குடியில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்

தேவகோட்டை, நவ. 16: தேவகோட்டை அருகே கண்ணங்குடி ஊராட்சி ஒன்றிய மங்களம் நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி மேலாண்மை குழு தலைவி இலக்கியா தலைமை வகித்தார். காலை வழிபாட்டு கூட்டத்தில் மாணவர்கள் குழந்தைகள் தின உறுதிமொழி எடுத்து கொண்டனர். தலைமையாசிரியை கவிதா முன்னிலையில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மாணவிகள் சேனாதிகா, கீர்த்தனா மற்றும் ஆசிரியைகள் பாண்டிச்செல்வி, ராணி பாடல் பாடினர். மாணவர்கள் ஹரி பிரத்யூஷ், சந்தீஸ், பிரத்விராஜ் நேருவை பற்றி பேசினர். ஆசிரியை ஷீபா விண்ணரசி நடனம் ஆடினார். ஆசிரியை ச.கவிதா மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். ஹைடெக் லேப் ஆசிரியர் சங்கீதா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

The post தேவகோட்டை கண்ணங்குடியில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Children's Day Festival ,Kannangudi, Devakota ,Devakota ,Children's Day ,Kannangudi Panchayat Union Mangalam Middle School ,Devakottai ,School Management Committee ,Chairwoman ,Literha ,Devakottai Kannangudi ,
× RELATED தேவகோட்டையில் பல ஆண்டு கால ஆக்கிரமிப்புகள் அகற்றம்: டிஎஸ்பி நடவடிக்கை