×

மதுபாட்டில் விற்றவர் கைது

விருத்தாசலம், நவ. 16: விருத்தாசலம் அடுத்த பெண்ணாடம் சப்-இன்ஸ்பெக்டர் பாக்யராஜ் மற்றும் தனிப்பிரிவு தலைமை காவலர் ரமேஷ் உள்ளிட்ட போலீசார் பெ.பூவனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அனுமதி இல்லாமல் 2 மது பாட்டில்களை விற்ற ஒருவரை கையும், களவுமாக பிடித்தனர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் சுரேஷ்(41) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மதுபாட்டில் விற்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Vridthachalam ,Sub ,Bhagyaraj ,Chief Constable ,Ramesh ,Virudhachalam ,Pannadam ,Bhuvanur ,Dinakaran ,
× RELATED விருத்தாசலம்-திட்டக்குடி...