- இந்திரா
- பாஜக
- காங்கிரஸ்
- அமித் ஷா
- மும்பை
- யூனியன்
- உள்துறை அமைச்சர்
- மகாராஷ்டிரா சட்டமன்றம்
- இந்திரா காந்தி
- ஜம்மு மற்றும்
- காஷ்மீர்
- மகாராஷ்டிரா காங்கிரஸ்
- காங்கிரஸ்
மும்பை: மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்று பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘ இந்திரா காந்தி உயிரோடு வந்தாலும் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவு வராது’ என்று பேசினார். இதற்கு மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல் நேற்று பதிலடி கொடுத்தார்.
அவர் கூறுகையில்,’ காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் மூலம் நீங்கள் சாதித்தது என்ன? நீங்கள் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தான் காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலை நடத்த முடிந்தது. தீவிரவாதம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ராணுவ வீரர்கள் தினமும் வீரமரணம் அடைந்து வருகின்றனர். இந்த நாட்டில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமராக இருந்தவர் இந்திராகாந்தி. மறைந்த அவரை 370வது சட்டப்பிரிவில் அமித்ஷா விமர்சனம் செய்வது தவறானது. இந்திராகாந்தி இன்று உயிருடன் இருந்திருந்தால், பாஜ எங்கும் இருந்திருக்காது. இந்திராகாந்தியை விடுங்கள், தற்போது ராகுல்காந்தியைக் கண்டு பா.ஜ பயப்படுகிறது. கனவில் கூட அவரைப்பற்றித்தான் பா.ஜவினர் நினைக்கிறார்கள்’ என்று பேசினார்.
காங்கிரஸ் தலைவர் கார்கே கூறுகையில்,’ சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்தவே 370வது சட்டப்பிரிவை பாஜ உயிருடன் வைத்துள்ளது. காங்கிரஸ் 370-வது சட்டப்பிரிவை திரும்பக் கொண்டுவர விரும்புகிறது என்று அமித்ஷா கூறுகிறார். யார், எப்போது சொன்னார்கள் என்று சொல்லுங்கள் ’ என்றார்.
The post இந்திரா இருந்திருந்தால் பாஜ இருந்திருக்காது: அமித்ஷா பேச்சுக்கு காங்கிரஸ் பதிலடி appeared first on Dinakaran.