புதுடெல்லி: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) தனியாருடன் இணைந்து பினாகா மல்டிபிள் லாஞ்ச் ராக்கெட் அமைப்பை தயாரித்துள்ளது. இதன் சரிபார்ப்பு சோதனைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த சோதனைகளின்போது, 3 வெவ்வேறு தளங்களில் இருந்து ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனத்தின் 12 ராக்கெட்கள், மேம்படுத்தப்பட்ட பினாகா லாஞ்சர்களில் இருந்து ஏவப்பட்டன.
இவற்றின் துல்லிய தாக்குதல், நிலைத்தன்மை, சுடும் வேகம் ஆகிய அளவீடுகள் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டதாகவும் இந்த ராக்கெட் அமைப்பு ராணுவத்தில் சேர்க்கப்படுவதற்கு முன் தேவையான அனைத்து சோதனைகளையும் முடித்திருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post பினாகா ராக்கெட் சோதனை வெற்றி appeared first on Dinakaran.