×
Saravana Stores

உ.பி. அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு எதிராக போராட்டம்: ஷிஃப்ட் முறை தேர்வு அறிவிப்புக்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு

உத்திரப்பிரதேசம்: உத்திரப்பிரதேசத்தில் போலீசாரின் தடுப்புகளை தாண்டி சென்ற மாணவர்கள் அரசு பணியாளர் தேர்வாணையம் அலுவலகத்தை முற்றிகையிட்டதால் பரபரப்பு நிலவியது. உத்திரப் பிரதேச அரசு அலுவலகங்களில் காலி பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு, பிராந்திய குடிமை பணித்தேர்வுகள் டிசம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தேர்வு மூன்று ஷிஃப்டுகளாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

தேர்வுகளை ஒரே நாளில் ஒரே ஷிஃப்ட்டில் நடத்த வலியுறுத்தி நான்காவது நாளாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பிரயாக்ராஜில் உள்ள அரசு பணியாளர் தேர்வாணையம் அலுவலகம் முன்பு திரண்ட மாணவர்கள் போலீசாரின் தடுப்புகளை தாண்டி சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. மாகாண சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வையும், ஆர்.ஓ.ஏ.ஆர்.ஓ. ஆகிய பதிவிகளுக்கான தேர்வையும் ஒரே நாளில் ஒரே ஷிஃப்ட்டில் நடத்த வேண்டும் என்றும் மாணவர்கள் முழக்கமிட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை காவல்துறையினர் இழுத்து சென்றனர். வன்முறையில் ஈடுபட்டதாக 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனிடையே மாணவர்களின் போராட்டத்திற்கு தீர்வு காண்பது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு வருமாறு துணை முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். மாணவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து ஒரே ஷிஃப்ட்டில் தேர்வு நடத்த வேண்டும் என சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர்.

The post உ.பி. அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு எதிராக போராட்டம்: ஷிஃப்ட் முறை தேர்வு அறிவிப்புக்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : UTTAR PRADESH ,Government ,U. B. ,
× RELATED உத்தரப்பிரதேசத்தில் பாஜக அரசை கண்டித்து போராட்டம்