×

காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க 50 எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.50 கோடி பாஜ பேரம்: சித்தராமையா குற்றச்சாட்டு

பெங்களூரு: காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் 50 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு தலா ரூ.50 கோடி வழங்குவதாக பாஜ விலை பேசுவதாக முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். மைசூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியதாவது: எப்படியாவது கர்நாடக அரசை கவிழ்க்க நினைக்கும் பாஜ, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 50 பேருக்கு தலா ரூ.50 கோடி தருவதாக விலை பேசுகிறது. ஆனால், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் யாரும் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. பாஜவிற்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது? முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை, எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோக், பாஜ மாநில தலைவர் விஜயேந்திரா ஆகியோர் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கின்றனரா? அவையனைத்துமே ஊழல் பணம், லஞ்சப் பணம். ஊழல் செய்து கோடிக்கணக்கில் பணம் சேர்த்து வைத்துள்ளனர். அந்த பணத்தின் மூலம், ஒரு எம்.எல்.ஏவிற்கு ரூ.50 கோடி கொடுப்பதாக பாஜ அணுகியுள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஒப்புக்கொள்ளாததால் எப்படியாவது ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்பதால் தான் பல்வேறு பொய் புகார்களை கூறி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

The post காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க 50 எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.50 கோடி பாஜ பேரம்: சித்தராமையா குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Congress ,Siddaramaiah ,Bengaluru ,Chief Minister ,BJP ,Congress government ,Mysuru ,Karnataka ,
× RELATED அம்பேத்கர் இல்லையென்றால் மோடி...