×

திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் வட்டார விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருப்பரங்குன்றம், நவ. 13: திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் வட்டார விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. திருப்பரங்குன்றம் அருகில் உள்ள தனக்கன்குளத்தில் அமைந்துள்ள திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் நேற்று வட்டார விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தாலுகா தாசில்தார் கவிதா தலைமை வகித்தார்.

பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். வழக்கத்திற்கு மாறாக நேற்றைய விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் குறைந்த அளவிலான விவசாயிகளே கலந்து கொண்டனர். மேலும் பெரும்பாலான துறை அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை எனவும் விவசாயிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. விவசாயிகள் கூட்டத்தை முறையாக அனைத்து துறை அலுவலர்கள் முன்னிலையில் நடத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

The post திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் வட்டார விவசாயிகள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Tiruparangunram taluk ,Tiruparangunram ,Thanakankulam ,Taluka Tahsildar Kavita ,Tiruparangunram Taluk Office ,Dinakaran ,
× RELATED திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் குறித்த ஆலோசனை கூட்டம்