×
Saravana Stores

பெற்றோரை இழந்த விரக்தியில் இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை

திருத்தணி: திருத்தணியில் பெற்றோரை இழந்த விரக்தியில் தூக்கிட்டு இன்ஜினியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ராஜிவ்காந்தி நகரைச் சேர்ந்தவர்‌ ஆனந்த்பாபு (31). பொறியியல் பட்டதாரியான இவரது தந்தை சுப்பிரமணி, தாய் கோமலா ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர். இதனால் ஆனந்த்பாபு மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் ஆனந்த்பாபு வீடு கடந்த 4 நாட்களாக உள்பக்கமாக பூட்டிக் கிடந்தது. மேலும் வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் திருத்தணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் திருத்தணி உதவி காவல் ஆய்வாளர் குணசேகரன் வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது, படுக்கையறையில் இருந்த மின்விசிறியில் ஆனந்த்பாபு தூக்கிட்டு தற்கொலை செய்து சடலமாக தொங்கினார். அவர் 4 நாட்களுக்கு முன்மே இறந்ததால் சடலம் அழுகி துர்நாற்றம் வீசியது தெரிய வந்தது. சடலத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த ஆனந்த்பாபுவின் சகோதரி திருமணமாகி கணவருடன் திருப்பதியில் வசித்து வருகிறார். ஆனந்த்பாபுவுக்கு திருமணமாகாத நிலையில், அவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். பின்னர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டை விற்க முடிவு செய்து, வீடு வாங்க வந்தவரிடம் முன் பணம் பெற்றுக் கொண்டதும், தனிமையில் அதிகளவில் மது அருந்தி மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டதும் விசாரணையில் தெரியவந்தது.

The post பெற்றோரை இழந்த விரக்தியில் இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Thiruthani ,Anand Babu ,Tiruthani Rajiv Gandhi Nagar, Tiruvallur District ,Subramani ,Komala ,
× RELATED திருத்தணி மலை பாதையில் பஸ்கள் திடீர் மோதல்: பக்தர்கள் உயிர் தப்பினர்