- நெடுஞ்சாலை
- திருவள்ளூர்
- தேசிய நெடுஞ்சாலை
- திருவள்ளூர்
- கடம்பத்தூர் யூனியன்
- மண்ணூர் கூட்டுச் சாலை
- மப்பேடு யூசன் நகர்
- தின மலர்
திருவள்ளூர், நவ. 16: திருவள்ளூர் அருகே தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம், மண்ணூர் கூட்டுச் சாலையில் இருந்து மப்பேடு உசேன் நகர் வரை 5.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக ₹60 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், தேசிய நெடுஞ்சாலை சாலை விரிவாக்க திட்டத்தின் கீழ் 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்வதற்காக நிலத்தின் உரிமையாளர்கள் 70 பேருக்கு ₹14 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கட்டிடங்களின் உரிமையாளர்கள் தங்களது கட்டிடங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் தடுப்பதற்காக தாங்களாக முன்வந்து கட்டிடங்களை இடித்து அகற்றிக் கொள்ளுமாறு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் பல்வேறு இடங்களில் இழப்பீட்டுத் தொகை பெற்றுக்கொண்டு ஓராண்டாகியும், கட்டிடங்களின் உரிமையாளர்கள் தாங்களாக முன்வந்து ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றவில்லை. எனவே, தேசிய நெடுஞ்சாலைத் துறை மாவட்ட வருவாய் அலுவலர் ஆனந்தகுமார் உத்தரவின் பேரில் தேசிய நெடுஞ்சாலைத் துறை பொறியாளர் பிரவீன், நில எடுப்பு தனி வட்டாட்சியர் வில்சன் முன்னிலையில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் 5 வீடுகள் மற்றும் 2 கிறிஸ்தவ தேவாலயங்களின் முன் பகுதி, பள்ளி சுற்றுச்சுவர் நேற்று ஆகியவற்றை இடித்து அகற்றினர். அப்போது துணை வட்டாட்சியர் நரசிம்மன், வருவாய் ஆய்வாளர் பாரதி பிரியா, மப்பேடு சப் – இன்ஸ்பெக்டர் சக்திவேல் உட்பட பலர் இருந்தனர்.
The post தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றம் appeared first on Dinakaran.