×

ஆதிதிராவிட மக்களுக்காக வழங்கப்பட்ட 224 ஏக்கர் நிலத்தை மீட்டு தர கோரிக்கை

திருவள்ளூர்: ஆதிதிராவிட மக்களுக்காக வழங்கப்பட்ட 224 ஏக்கர் நிலத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது. நேமலூர் கிராமத்தில் ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்ட 224.8 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்க வலியுறுத்தி அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாவட்ட நலக்குழு உறுப்பினர் நீலவானத்து நிலவன் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: கும்மிடிப்பூண்டி வட்டம் நேமலூர் கிராமத்தில் சர்வே எண் 533 முதல் 579 வரை மொத்தம் 196.48 ஏக்கர் விவசாய நிலமும், சர்வே எண் 538 முதல் 568 வரை 28 ஏக்கர் கிராம நத்தம் நிலமும் என மொத்தம் 224.8 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. இந்த நிலங்களை இவர்கள் சமம் செய்து பயிர் செய்து வந்தனர். அதன் பின்னர் மழை சரியாக இல்லாத காரணத்தால் பயிர் செய்யாமல் இருந்தனர். அப்போது 22 ஆக்கிரமிப்பாளர்கள் அபகரித்துக்கொண்டு தற்சமயம் வரை அனுபவித்து வருகின்றனர். எனவே, கலெக்டர் உடனடியாக ஆக்கிரமிப்பு செய்தவர்களை வெளியேற்றி நிலத்தை மீட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தது.

The post ஆதிதிராவிட மக்களுக்காக வழங்கப்பட்ட 224 ஏக்கர் நிலத்தை மீட்டு தர கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Adi Dravida ,Tiruvallur ,Adi Dravidas ,Nemalur ,
× RELATED உசிலம்பட்டி அருகே...