×
Saravana Stores

விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு முதல்வர் சந்திரபாபு நாயுடு படத்திற்கு பாலாபிஷேகம் செய்து நன்றி தெரிவிப்பு

சித்தூர் : விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியதால் முதல்வர் சந்திரபாபு நாயுடு பாலாபிஷேகம் செய்து நன்றி தெரிவித்தனர்.
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு விளையாட்டு வீரர்களுக்கு அரசு பணியில் அனைத்து துறைகளிலும் 3 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்குவதாக உத்தரவு பிறப்பித்தார். இதனை அடுத்து சித்தூர் மாவட்ட விளையாட்டு துறை சார்பில் மாநில முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சித்தூர் காந்தி சிலை அருகே முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உருவ படத்திற்கு பால் அபிஷேகம் செய்து நன்றியை தெரிவித்தனர்.

இதுகுறித்து முன்னாள் எம்எல்சி துரை பாபு கூறியதாவது: மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநிலத்தில் விளையாட்டு துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இந்தியாவில் ஆந்திர மாநிலம் விளையாட்டு துறையில் சிறந்த விளங்க வேண்டும் என விளையாட்டு துறையை ஊக்குவித்து வருகிறார். தற்போது மாநிலம் முழுவதும் உள்ள விளையாட்டு வீரர் வீராங்கனைகளை ஊக்கப்படுத்த மாநிலம் முழுவதும் அனைத்து அரசு துறைகளில் பணிபுரிய மூன்று சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த ஆட்சியில் இரண்டு சதவிகிதம் விளையாட்டு வீரர்களுக்கு அரசு பணியில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது.

தற்போது முதல்வர் 3 சதவிகிதமாக அறிவித்தது. விளையாட்டு வீரர்கள் இடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு விளையாட்டு துறையை ஊக்கப்படுத்த அனைத்து பஞ்சாயத்துகளிலும் விளையாட்டு மைதானங்கள் அமைத்து அனைவரும் அவர்களுக்கு விருப்பத்திற்கு ஏற்ப விளையாட்டுகளை விளையாட்டு வீரர்கள் விளையாட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மிக விரைவில் மாநிலம் முழுவதும் அனைத்து பஞ்சாயத்துகளிலும் விளையாட்டு மைதானங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் இந்தியாவில் விளையாட்டு துறையில் ஆந்திர மாநிலம் முதன்மை மாநிலமாக மாற்றி அமைக்க முதல்வர் சந்திரபாபு நாயுடு பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறார். விளையாட்டு துறைக்கு தனியாக நிதி கூடுதலாக ஒதுக்கி வருகிறார்.
ஆகவே ஒரு மாவட்டம் முழுவதும் உள்ள கிராமங்களிலும் மண்டலங்களிலும் பஞ்சாயத்துகளிலும் விளையாட்டு வீரர் வீராங்கனைகள் விருப்பத்திற்கு ஏற்ப விளையாட்டை நன்றாக விளையாடி ஆந்திர மாநிலத்திற்கும் சித்தூர் மாவட்டத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாநகராட்சி முன்னாள் மேயர் கட்டாரி ஹேமலதா, ஒலிம்பிக் கமிட்டி மாவட்ட தலைவர் சந்திரசேகர் மற்றும் ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு உருவப்படத்திற்கு பால் அபிஷேகம் செய்தனர்.

The post விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு முதல்வர் சந்திரபாபு நாயுடு படத்திற்கு பாலாபிஷேகம் செய்து நன்றி தெரிவிப்பு appeared first on Dinakaran.

Tags : CM Chandrababu Naidu ,Chittoor ,Chief Minister ,Chandrababu Naidu ,Andhra Pradesh ,CM ,
× RELATED சித்தூர் மாவட்டத்தில் வழக்குகள்...